Friday, October 29, 2004

வெடிகுண்டு தேசம்...

வியட்நாம் என்றொரு தேசம், அதில் அமெரிக்கா நடத்திய போர், இரு நாடுகளிலும் அதன் தாக்கம்... நவீன வரலாற்றின் மிகவும் கறை படிந்த பக்கங்கள். வியட்நாம் போரை இரண்டாம் உலகப்போரின் ஒரு தொடர்ச்சியாய்கூட கூறலாம். சைனாவின் ஆதிக்கத்தில் இருந்த வியட்நாமை மெல்ல மெல்ல 1860ல் ஆக்கிரமிக்க ஆரம்பித்த பிரான்சு 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதன் கட்டுக்குள் கொண்டுவர தொடங்கியது. இதன் நடுவே தன் பலத்தைக் காட்ட நினைத்த ஜப்பான், வியட்நாமை அடைய பிரான்சுடனான போராட்டத்தை தொடங்கி, 1945ல் ஒருவாறு, வியட்நாமியர்களை வைத்தே ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவியது. விடுவானா வீரன்? ஜப்பானியர்கள் கைப்பற்றிய பகுதிகளை மீண்டும் தன் கட்டுக்குள் கொண்டு வர பிரான்சு பெரும் பிராயத்தனப்பட்டது. ஆனால், 1954ல் பிரான்சு தோல்வியுற்று, நாட்டை விட்டு வெளியேறியது. அப்போது நாடு வ்டக்கு, தெற்கு என இரு பிரிவுகளாக இருந்தது. வட பகுதியை கம்யூனிஸ்டுகள் கவனித்து கொள்ள தென் பகுதியை, வியட்நாமின் அதிபராக சுய பிரகடனம் செய்து கொண்ட Ngo Dinh Diem தத்தெடுத்துக்கொண்ட கையோடு, தென் பகுதியை வியட்நாம் குடியரசு என பிரகடனபடுத்தினார். தென் வியட்நாமின் இந்த முக்கிய பிரகடனத்தினால் கவரப்பட்டு, ஏராளமான வடவியட்நாமியர்கள் தென் பகுதிக்கு குடிபெயர தொடங்கினர். வடபகுதியை ஆண்டு வந்த கம்யூனிஸ்டுகள் தெற்கில் இருந்த தமது தோழர்களின் உதவியோடு, 1955ல் இருந்து வட பகுதிக்காக போரிட ஆரம்பித்து, 1963ல், Ngo Dinh Diem ன் ஆட்சியை கவிழ்த்ததோடு அவரை கொல்லவும் செய்தனர்[மரணதண்டனை]. வடவியட்நாமையும், தென்வியட்நாமையும் இணைத்தாயிற்று, அதற்கு அடுத்ததாக, அந்த நாட்டில் மிச்சம் மீதியிருந்த, தன்னிச்சையாய் இயங்கிவந்த சில, பல குறுநிலங்களையும் கம்யூனிஸ்டுகள் கைப்பற்றியாயிற்று. இதில் அமெரிக்கா எங்கிருந்து வந்தது?....பிறகு....
[வியட்நாமில் அமெரிக்கா வீசிய குண்டுகளின் அளவு... சில மில்லியன் டண்கள். வீசப்பட்ட மொத்த குண்டுகளின் எண்ணிக்கை...[முடிந்தால் கற்பனை செய்து கொள்ளுங்கள்] தொடர்ச்சியாய், 9 ஆண்டுகளுக்கு, 8 நிமிடத்திற்கு ஒரு முறையென குண்டுகள் வீசினால் அது எத்தனை குண்டுகளோ, அத்தனை குண்டுகள். இன்னமும் வியட்நாமில் தினமும் செயலிழந்த, செயலிழக்காத என வகை வகையாய் குண்டுகள் கிடைத்தவண்ணம் உள்ளன. இது வெடிகுண்டு தேசம்தானே!!!]

2 Comments:

At 7:17 AM, Anonymous Anonymous said...

Your way of presentation is good to read. Expecting the remaing part of the contents also soon. Congrats.

 
At 8:23 AM, Anonymous Anonymous said...

தங்களின் பதிவுகள் படிக்கும் ஆற்வத்தை கூட்டும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளன.

தொடர்ந்து எழுதுங்கள்.

தாய்மொழி கன்னடமாட இருந்தும் தமிழில் சிறப்பாக எழுதுவதர்க்கு வாழ்த்துக்கள்.

ஆனால் முடியும் பொழுது தங்கள் தாய்மொழியான கன்னடத்தையும் கற்கவும்.
"தாய்மொழி கல்வி இந்திய நாட்டுக்கு தேவை"

அன்புடன்,
roy

 

Post a Comment

<< Home