Thursday, November 04, 2004

என் கொள்கைகளுக்கு மாறாக, கொஞ்சம் அரசியல்....

1. அறிஞர் அண்ணா என்பவர் யார்?
2. அவர் ஒரு பெருந்தலைவர் ஆவதற்கு என்ன செய்தார்?
3. அவரை அறிஞர் என்று நாம் கொண்டாடுவது ஏன்?
4. தமிழக திராவிட கட்சிகள் அவரை வைத்து ஏன் இன்னும் அரசியல் புரிகிறார்கள்?
5. அண்ணாவை பற்றி[வாழ்க்கை வரலாறு அல்ல], திராவிட சார்பு நிலையற்ற யாராவது புத்தகம், கட்டுரை எதாவது எழுதியிருக்கிறார்களா?
6. திராவிட கட்சிகளின் வரலாறு என்ன?
7. புஷ் ஏன்&எப்படி ஜெயித்தார்?
8. அமெரிக்காவின் எதிர்காலம் என்ன?
9. புஷ்ஷின் அதிகார துஷ்பிரயோகம் ஒரு தொடர்கதையானால், உலக அரங்கில் அதன் பாதிப்புகள் என்னவாக இருக்கும்?
10. திராவிட - அமெரிக்க அரசியல்வாதிகள்... அடிப்படை ஒற்றுமைகளும், மக்களின் நிலைபாடும்...
அலுவலகத்திலிருந்து ஒரு வாரம் விடுப்பில் சொந்த ஊருக்கு போகிறேன். கிராமமாதலால், வீட்டில், dialup மட்டுமே சாத்தியம். dialup என்பது என்னை பொருத்தவரை யாருக்கும் நேரக்கூடாத கொடுமை. அதனால், இந்த ஒரு வாரத்தை நான் மேற்கண்ட 10 கேள்விகளுக்கு விடை தேட பயன்படுத்த போகிறேன். நிச்சயம், எதாவது உருப்படியான, ஆச்சர்யபடும்படியான தகவல் கிடைக்கும் என நினைக்கிறேன். திரும்ப வந்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன். எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
[தொடர்ச்சி...]
ஊர் சென்று திரும்பியாகிவிட்டது. அண்ணாவைப் பற்றி மறக்காமல் பலபேரிடம் கேட்டதில் கிடைத்த பதில் போதுமானதாயும், திருப்திதரும்படியும் இல்லாததால் அவரைப் பற்றி கண்ணதாசன் எழுதிய 'வனவாசம்' நூலைப் படித்து பார்த்து முதல் கட்டுரையையும், கிடைக்கும் மற்ற நூல்களைப் பொறுத்து இரண்டாம் கட்டுரையையும் எழுத வேண்டும்... பள்ளிகளில் அண்ணாவைப்பற்றி பாடம் இருந்தது. ஆனால் அது அவ்வளவு விரிவானதாக இல்லாததால் எனக்கு இந்த குழப்பம். அடிக்கடி வலை மேயும் நம்மில் பலருக்கு மைக்கேல் மூரையும் அவரின் வலைதளத்தையும் நன்கு தெரியுமாதலால் [www.michaelmoore.com] புஷ் ஒன்றும் புதியவரல்ல!!! என்னைப் பொறுத்த வரை அரசியல் ஒரு நுட்பமான, அறிவு ஜீவிகளின் கணிதம். ஆரம்பத்தில் தெளிவாக இருந்து பின் மெல்ல மெல்ல குழம்பி, பின் ஒரு நாளின் தீடீர் ஞானோதயத்தால் தெளிவு பெறும் ஒரு சாகச கலை. என்னைப் போன்றவர்களுக்கு சுட்டுப் போட்டாலும் வராது. இருந்தாலும் முயற்சி செய்ய ஆசை. முதலில் கண்ணதாசனின் புத்தகத்தைப் படித்துப் பார்க்கிறேன். அதன் பிறகு.....

1 Comments:

At 10:49 PM, Anonymous Anonymous said...

1. கர்மவீரர் காமராஜ் என்பவர் யார்?
2. அவர் ஒரு பெருந்தலைவர் ஆவதற்கு என்ன செய்தார்?
3. அவரைக் கர்மவீரர் என்று நாம் கொண்டாடுவது ஏன்?
4. தமிழக பேராயக்கட்சிகள் அவரை வைத்து ஏன் இன்னும் அரசியல் புரிகிறார்கள்?
5. காமராசரைப் பற்றி[வாழ்க்கை வரலாறு அல்ல], பேராயச் சார்பு நிலையற்ற யாராவது புத்தகம், கட்டுரை எதாவது எழுதியிருக்கிறார்களா?
6. பேராயக் கட்சிகளின் வரலாறு என்ன?
7. புஷ் ஏன் & எப்படி ஜெயித்தார்?
8. அமெரிக்காவின் எதிர்காலம் என்ன?
9. புஷ்ஷின் அதிகார துஷ்பிரயோகம் ஒரு தொடர்கதையானால், உலக அரங்கில் அதன் பாதிப்புகள் என்னவாக இருக்கும்?
10. பேராய - அமெரிக்க அரசியல்வாதிகள்... அடிப்படை ஒற்றுமைகளும், மக்களின் நிலைபாடும்...

;-)

 

Post a Comment

<< Home